உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

போலி இலக்கத்தகடுகளை கொண்ட மேலும் பல வாகனங்கள் சிக்கின
போலி இலக்கத்தகடுகளை பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடும் 2,267 அதி சொகுசு வாகனங்களை பொலிஸார் இனங்கண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு நகரத்தின் பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்கள் ஊடாக இந்த வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கமராக்கள் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நடவடிக்கைகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…