போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொட்டிகாவத்தை – நாகஹமுல்ல பகுதியில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தில் 27 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு – வௌியான தகவல்கள்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர்…

Read More

மித்தெனிய முக்கொலை – கைதான சந்தேகநபர்

மித்தெனியவில் அனுர விதானகமகே (கஜ்ஜா) மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இன்று (25) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாக தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது…

Read More

போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது

5 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து குறித்த போதைப்பொருளை கடத்துவதற்கு முயற்சித்த நிலையில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த…

Read More

தெவிநுவர இரட்டைக் கொலை தொடர்பில் ஒருவர் கைது

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர ஶ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு வாயிலுக்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, குற்றச் செயலானது கடந்த மார்ச் 21ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகளை வாகனத்தில் அழைத்துச் சென்றதோடு, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டி அவர்களுக்கு உதவியமைக்காக குறித்த சந்தேக நபர் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தலல்ல…

Read More

மக்களைக் கொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது? நாமல் ராஜபக்ஷ

1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொலை அலை அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் தந்தையர்களைக் கொல்லும் கலாச்சாரம் மீண்டும் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எமது கட்சியின்…

Read More

சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால் விசாரணை – பொலிஸாரின் அறிவித்தல்

உந்துருளியில் பயணிக்காத ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

வைத்தியர்களுக்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்கள்

தெல்லிப்பழை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் மீது பொலிசார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர் ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த வேளை, குறித்த நபரின் மகன் மற்றும் அவரது…

Read More

டேன் பிரியசாத் கொலைக்கும் சகோதரரின் கொலைக்கும் தொடர்பா?

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்தனர்.  இந்தக் கொலை சம்பவத்தில் பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்சன எனும் தந்தை, மகன் இருவர் மீதும் விசாரணைகளின் போது சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து, குறித்த இருவரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும், அவர்களின் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.  இந்த கோரிக்கையை…

Read More

அடுத்த இரு நாள்களுக்கு தலதா யாத்திரையை தவிர்க்குமாறு கோரிக்கை

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்திரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது. தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே, நாளை (24) மற்றும் நாளை மறுநாள் (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்திரீகர்கள் வந்துவிட்டதால்,…

Read More