மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது….

Read More

யாழ் பொலிஸாரின் மோசமான செயல் …துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ஒரு சந்திப்பை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்தச் சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளுடன் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்திப்புக்கு அழைப்பு…

Read More

காஷ்மீரில் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் -28 பேர் பலி

காஷ்மீர் – பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  முக்கிய சுற்றுலாத் தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த தாக்குதலைப் பொறுப்பேற்றுள்ளது.

Read More

மாத்தறை சிறைச்சாலையில் அமைதியின்மை

மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது. ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும்,…

Read More

டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 9.10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்தார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு நபர் சிறு…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் 06 வருடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் 06 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சஹரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம், அதேபோன்று ஷங்ரி-லா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. தெமட்டகொடை மற்றும்…

Read More

மன்னாரில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது, பொலிஸார் துப்பாக்கிச்சூடு

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி பொலிசார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்டபோது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது. இதன்போது டிப்பர்…

Read More

ஈஸ்டர் தாக்குதலை அரசியலாக்கும் அரசாங்கம் : நாமல் எம்.பி சீற்றம்

ஈஸ்ரர் தின தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்வதாக நாமல் ராஜபக்ச எம்.பி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை, அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவுகளின்படி, பெப்ரவரி 23, 2021 அன்று முறையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெப்ரவரி 25, 2021 அன்று அல்லது அதற்குள், நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக பொதுமக்கள் இன்னும்…

Read More

ஸ்ரீ தலதா வழிபாடு நிகழ்விற்கான போலி அழைப்பிதழ் குறித்து அரசாங்கம் எச்சரிக்கை

கண்டியில் நடைபெறும் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ நிகழ்விற்கான போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள திணைக்களம், அரசாங்கம் அத்தகையை எந்த அழைப்பையும் வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டியது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் அழைப்பிதழ், இன்று கண்டியில் நடைபெறும் ஸ்ரீ தலதா வழிபாடுவில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது. கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த…

Read More

காதலனின் மரண செய்தி கேட்ட காதலி தற்கொலை

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More