போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை GovPay ஊடாக செலுத்தும் திட்டம் அறிமுகம்

CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நடைமுறையிலிருந்த திட்டத்தின் படி, ஒரு சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறினால், பொலிசாரால் வழங்கப்படும் தண்டனைச் சீட்டை தபால் நிலையத்தில் காண்பித்து அதில் குறிப்பிட்டுள்ள அபராத பணம் செலுத்தி அதன் ரசீதை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் மட்டுமே சாரதி…

Read More

பொலிஸ் நிலையங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

பொலிஸ் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக்…

Read More

விடுதியின் மேற்கூரை இடிந்த விபத்து .. அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது திடீரென கேளிக்கை விடுதியின்…

Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.

Read More

பண்டிகை காலத்தில் பாதுகாப்பு கடமையில் 35,000 பொலிஸார்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பகுதியில் பாதுகாப்புக்காக போக்குவரத்து பொலிஸார் உட்பட சுமார் 6,000…

Read More

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவின் பெலிகஸ்வெல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய, நேற்று (09) பிற்பகல் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 46 வயதுடைய திக்கெலே, பெலிகஸ்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை…

Read More

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு – பொலிஸில் சரணடைந்த இருவர்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று (07) குறித்த சந்தேக நபர்கள் இரு சட்டத்தரணிகளுடன் கந்தர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  சந்தேக…

Read More

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

கிரிபாவ பொலிஸ் பிரிவில் வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் மாத்தறை பிரதேசத்தில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்டதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் கடந்த 2ஆம் திகதி வீடொன்றுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 157,000 ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கிரிபாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய, கல்கமுவ…

Read More

மெக்சிகோ எல்லையை கண்காணிக்க குதிரைகளைப் பயன்படுத்தும் வீரர்கள்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் மெக்சிகோவின் ச்சிவாவா எல்லையில், கண்காணிப்புப் பணிகளுக்கு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் குதிரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு நிலப்பரப்புகளில் தொலைதூரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அவசர உதவிகளை விரைவாக கொண்டு செல்லவும் குதிரைகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை காரணமாக, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் மார்ச் மாதத்தில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Read More

அம்பலாந்தோட்டை முக்கொலை சம்பவம் – ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை, எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடந்த மூன்று கொலைகளுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்து, அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூவரும் உயிரிழந்தனர். அதன்படி, சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, ​​பியகம பொலிஸ் பிரிவில் நேற்று (02) மாலை அம்பலாந்தோட்டை பொலிஸாரால் ஒரு சந்தேக…

Read More