வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இத்தீர்மானம் குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது (Absenting from the…

Read More

CIDக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை குறித்த விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.  இந்தநிலையில் அவர் இன்று அதிகாலை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Read More

விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அஜித் பி. பெரேரா

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்குச் சாதகமான சாத்தியக்கூறுகள் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.  ஹிரு செய்திப் பிரிவுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.  விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அதற்கான சாத்தியக்கூறுகள் சர்வதேச ரீதியில் உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

Read More