தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.
அநுராதபுரம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் சனிக்கிழமையான இன்று (வெப்ரவரி 15) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 1,000 ரூபாவாக, ஒரு கிலோ பாகற்காய் 450 ரூபா முதல் 500 ரூபா வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபா முதல் 400 ரூபா வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 250 ரூபா முதல் 300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

