உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

இரவில் கனமழை : எச்சரிக்கை அறிவிப்பு.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெப்ரவரி 20) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படுவதோடு மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடியுடன் கூடிய…