இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். நாட்டின் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்
மட்டக்களப்பில் கடலில் மூழ்கிய சிறுவர்கள்
மட்டக்களப்பு, நாசிவன்தீவு கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு, மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (4) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று மாலை நாசிவன்தீவு கடற்கரைப் பகுதிக்குச் சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர். இதன்போது, 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் சிறுவர்கள் இருவரும் கடல்…

