உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் சில்லறை விற்பனையை RM Parks மற்றும் Tristar Group கூட்டாண்மையுடன் இலங்கையில் தொடங்கியுள்ளது.
இலங்கையில் ஷெல் வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டது. இது ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை சில்லறை தர அடையாள உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை தொடர்ந்து, ஷெல் மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் துணை நிறுவனங்கள் மார்ச் 2024 இல் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்பது…