ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

புதிதாக உதயமான அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்.
இலங்கையில் அச்சு, இலத்திரனியல்,இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சட்டரீதியாகவும், திறமையை வளர்க்கும் பங்காற்றலோடும், சரீர உதவிகளை வழங்குவதற்கும், சமூக மற்றும் தனிப்பட்ட ரீதியிலான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கோடும் இந்த புதிய அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இன்று (வெப்ரவரி 16) காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக அண்மையில் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி அய்யாவுக்கான…