தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரம் ஏழு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததோடு இதற்குதேவையான பணியாளர்கள் சுழற்ச்சி முறையில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். மேலதிக சேவை பணியாளர்களுக்காக பயிற்றப்பட்ட…

