மித்தெனிய முக்கொலை.. சிக்கிய துப்பாக்கிதாரி!

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவத்தில் வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது 8 வயது மகள்,9 வயது மகன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் பலியாகினர். வீரகெட்டிய மித்திதெனிய பகுதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உந்துருளியில் பயணித்த அடையாளந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்…

Read More

குற்றச்செயலை தடுப்பதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் அறிந்தவர்கள் அல்லது அயலவர்கள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட பொலிஸாரால் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 119 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த அவசர தொலைபேசி இலக்கங்களானது 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More