நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

‘அறிவுத்திறன் மிக்க ஆய்வுகளால் எதிர்காலத்தை செம்மையாக்கல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SLIIT இன் SICASH 2024 மாநாடு புதிய பாதையை வெளிப்படுத்தியது.
SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தினால் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘SLIIT விஞ்ஞான மற்றும் மனிதநேய முன்னேற்றத்துக்கான சர்வதேச மாநாடு’ – SICASH 2024 கல்விசார் ஆய்வு மற்றும் புதுமையில் புதியதோர் அடைவுமட்டத்தைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிகழ்வு கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இப்பீரியல் ஹோட்டலில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக நடைபெற்ற ளுஐஊயுளுர் மாநாடானது ‘அறிவுத்திறன் மிக்க ஆய்வுகளால் எதிர்காலத்தை செம்மையாக்கல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வியியலாளர்கள் தமது ஆய்வுகளைச் சமர்ப்பிப்பதற்கு…