இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
Haleon, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக வாய் சுகாதார தினம் 2026இன் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் இணைந்துள்ளது
முன்னர் SmithKline Beecham Private Limited, என்று அறியப்பட்டதும் தற்போது முன்னணி நுகர்வோர் சுகாதாரப் பராமரிப்பு தயாரிப்பு நிறுவனமாகவும் உள்ள Haleon Sri Lanka, 2026ஆம் ஆண்டின் உலக வாய் சுகாதார தினத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை பல் மருத்துவ சங்கத்துடன் (SLDA) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இடம்பெற்ற விழாவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் திகதி கொண்டாடப்படும் உலக வாய் சுகாதார தினத்தின்…