தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு 41 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டியில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,…

