தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோல்விக்கு நானே பொறுப்பு – தோனி
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால்…

