தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல நடிகை “மாலினி பொன்சேகா” வைத்தியசாலையில் அனுமதி.
இலங்கை சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல்நிலை மோசமடைந்து நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அதற்க்கான உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள கவனயீனமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நோயின் வீரியம் அதிகரித்தமையினால் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

