நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (11) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த…

Read More

நாட்டின் 04 மாவட்டங்களில் காலநிலை மாற்றம்

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் காலநிலை மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மோசமான வானிலையால் 4 மாவட்டங்களில் 716 பேர் பாதிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் வெப்ப நிலை காரணமாக 2 மாவட்டங்களில் 1282 குடும்பங்களைச் சேர்ந்த 3834 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்ட மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவை

மலையகப் ரயில் பாதையில் இன்று (01) காலை ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பதுளை மற்றும் ஹாலி-எல புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அது புனரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

02 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 02 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, ஹாலி அல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும் சொரணதொட்ட மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேசங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி…

Read More

இரவில் கனமழை : எச்சரிக்கை அறிவிப்பு.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெப்ரவரி 20) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படுவதோடு மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடியுடன் கூடிய…

Read More