நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14) அதிகாலை 1.30 மணியளவில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மொத்த மற்றும் சில்லறை உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவல் ஏற்பட்ட மூன்று வர்த்தக நிலையங்களும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானது எனவும், இதன்போது வர்த்தக நிலையத்தில் யாரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன்…

சிவனொளிபாத மலைப்பகுதியில் தீ பரவல்.
சிவனொளிபாத மலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ பரவலினால் சுமார் 30 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக வனப்பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்லத்தண்ணி வாழைமலைப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி மாலை ஏற்பட்ட காட்டுத்தீ அதிக வெப்பமனா காலநிலையினால் சிவனொளிபாதமலை தொடர் வரை பரவியது. எனினும் பெரும் பூரேற்றத்துக்கு மத்தியில் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் உதவியுடன் காட்டுத் தீ கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு பிரிவு அதிகாரி வீ.ஜே. ருக்ஷான் தெரிவித்துள்ளார். மலையகத்தில் தொடர்ந்து கடும்…