Executive Committee representation strengthens the company’s role in advancing bilateral business collaboration SLT-MOBITEL has reaffirmed its commitment to strengthening Sri Lanka–US business relations, joining the Sri Lanka–USA Business Council (SLUSABC) of the Ceylon Chamber of Commerce in celebrating a decade of advancing bilateral business engagement. The Council marked its 10th anniversary at its Annual General…
சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைது
பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திகனயாய பிரதேசத்தில் தம்பகல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 64 வயதுடைய பதுலுவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.