கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.