தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மதுபானசாலைகளுக்கு பூட்டு!
நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த திகதிகள் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு தினங்கள் என்பதால் மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. மதுவரி திணைக்களத்தின் இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கை சுற்றுலா அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று (03) நட்சத்திர விடுதிகள் மற்றும் அதற்கு மேற்பட்ட…

