உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட்.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று (19) புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று(வெப்ரவரி 19) காலை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி மொஹமட் அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் அடையாளம் காணப்பட்டு புத்தளம் பாலாவி பகுதியில் வேன் ஒன்றில் பயணிக்கும்போது விசேட அதிரடிப்படையினரால்(STF) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவை சேர்ந்தவர்…