இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பம் – ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் விசாரணை நடவடிக்கையில் குறித்த பாடசாலை அதிபரை அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே, மனைவிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் நேரடியாக வருகைதந்த மேல்மாகாண கல்வித்துறை அதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும், ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்தபொழுது, மக்கள் தங்கள்…
