பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச் 15) காலாவதியாகவிருந்த குறித்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும் மழையுடனான காலநிலை தொடரும்.
இன்றும் நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காலி,மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இடியுடன் பெய்யும் மழையின் பொது ஏற்படும் அனர்த்தங்களின் இருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.