இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 111,982 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும் வருகைதந்துள்ளதோடு சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப்…