இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

மார்ச் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை
மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களுக்குள் மட்டும் சுமார் ஒரு லட்சம் வரையான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாம் திகதி மார்ச் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97 ஆயிரத்து 322 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாதத்திற்குள் மட்டும் 14,848 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதே நேரம் இந்த ஆண்டின்…