இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சேவைகளில் பெண்களை சேர்ப்பதற்கான கொள்கை முடிவ
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் சேவையில் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று அவர் இதனை தெரிவித்தார் நாளை (08) வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை பேருந்துகள் பெண்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.