டிரம்பைச் சந்திக்கிறார் ஜெலென்ஸ்கி: போரை முடிக்கத் தீவிர முயற்சி

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். புத்தாண்டுக்கு முன்பாகவே போர் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வரைவுத் திட்டங்கள் தயாராக உள்ள நிலையில், இது குறித்து டிரம்ப்பின் தூதர்களுடன் ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும், ரஷ்யா கோரும் நிலப்பரப்பு சமரசங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.  இந்தச் சந்திப்பு போரை முடிவுக்குக்…

Read More

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கும் அமெரிக்கா

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில்,இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பல நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதை நேரலையில் அறிவித்தார். உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக…

Read More

அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றம்..

அமெரிக்காவில் கூட்டாட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் இதன்மூலம் அமெரிக்காவில் மாநில பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அந்நாட்டு கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியில் தான் அறிவித்ததைப் போலவே கல்வித்துறையை கலைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவால் தனியார் பள்ளிகள் பய ன் பெறக்கூடும் என கூறப்படுகிறது.

Read More

43நாடுகளுக்கு ட்ரம்ப் அரசாங்கம் விதிக்கவுள்ள புதிய தடை

ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பின் பல்வேறு புதிய கொள்கைகள் மற்றும் தடைகளை விதித்துவரும் நிலையில் தற்பொழுது சுமார் 43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து அமெரிக்கா பயணத் தடையை விதிப்பது தொடர்பில் பரிசீலித்து வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 11 நாடுகள் “சிவப்பு பட்டியலில்” உள்ளடக்கப்பட்டுள்ளன. சுற்றுலா விசாக்களில் பயணிக்கக்கூடிய “செம்மஞ்சள்” பட்டியலில் 10…

Read More