தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ட்ரம்ப் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை – சீனாவுடனான பாரிய வர்த்தக மோதல்
ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பின் விளைவாக எல்லா நாடுகளும் திணறிப்போயிருக்க. சீன மட்டும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவுக்கெதிரான வரியை அவர்கள் அதிகரித்தார்கள். தற்போது சீனா மீதான வரிகளை 125 வீதமாக உயர்த்தி உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள x தள அறிவிப்பில், “உலக சந்தைகளுக்கு சீனா காட்டிய அவமரியாதையின் அடிப்படையில், அமெரிக்காவால் சீனாவிற்கு விதிக்கப்படும் வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும்…

