அமெரிக்காவில் மேலும் பல அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது ஆலோசகர்ரும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கும் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அமெரிக்காவில் கிட்டத்தட்ட பத்தாயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். உள்துறை, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறைகளில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அமெரிக்காவில் அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக…

Read More

நாமல் ராஜபக்ஷவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை கட்சித்தலைமை காரியாலயத்துக்கு சென்று இன்று (வெப்ரவரி 14) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமன்ன, சி.பி. ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்! சூடுபிடிக்கும் சர்வதேச அரசியல் களம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ள நிலையில் அமெரிக்காவில் வழக்கம்போல் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதிவியேற்று அதிரடிமுடிவுகள் பல எடுத்துவரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை , நாடு கடத்தப்படும் இந்தியர்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More