இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

அனந்த் அம்பானியின் கனவுத்திட்டத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் நீண்ட நாள் கனவுத் திட்டமான வந்தாரா(Vantara) விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அந்த அழகிய மையத்தை பிரதமர் மோடி இன்று(மார்ச் 4) திறந்து வைத்ததோடு ஒவ்வொரு விலங்குகளாக தனித்தனியே நேரம் செலவு செய்து உணவூட்டி மகிழ்ந்தார் பிரதமர் மோடி. அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வருகைதந்த பிரபலங்கள் இந்த வந்தாராவை பார்வையிட்டு வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.