டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…

புதிய வாகன பதிவுகளுக்கு TIN எண் கட்டாயம்
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தௌிவுபடுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிபந்தனை மோட்டார் சைக்கிள்கள், கை இழுவை இயந்திரங்கள் (hand tractors), இழுவை இயந்திரங்கள் (tractors) மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் சேவைகள்…