இலங்கையின் முன்னணி மற்றும் புத்தாக்கமான தனியார் வாடிக்கையாளர் வங்கிகளில் ஒன்றான HNB PLC, தனது கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கான சமீபத்திய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு போட்டியின் வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தினசரி செலவுகளுக்காக கடன் அட்டையைப் பயன்படுத்திய நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு விடுமுறை பரிசாக இது வழங்கப்படுகிறது. இதன் அதிர்ஷ்ட வெற்றியாளராக HNBஇன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் Dr. Anoja Rajapakse தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருவருக்கான சிங்கப்பூர் பயணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், பயணச் செலவுகளுக்காக அவரது…

இயக்குனர் “விக்ரம் சுகுமாரன்” திடீர் மரணம்
மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் போன்ற திரைப்படங்களின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் பேருந்தில் பயணிக்கும்போது மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதையினை கூறிவிட்டு சென்னைக்கு வருகின்றபோதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ” ஆடுகளம்” திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு துணை இயக்குனராக பணியாற்றியதோடு வசனங்களை எழுவதற்கும் துணைநின்றவர். அதேநேரம் “பொல்லாதவன்”, “கோடி வீரன்” திரைப்படங்களில் தனது நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர். இவருடைய திடீர் மரணச்செய்தி திரையுலகை…