இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
WealthTrust Securities நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையில் ஒரு சில நிமிடங்களுக்குள் அளவுக்கதிமான விண்ணப்பங்கள்
WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், மாலை 4.30 மணிக்கு இதனை நிறைவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. ரூபா 500,837,708 தொகையை திரட்டுவதற்காக ரூபா 7 என்ற விலையில் 71,548,244 சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகள் வழங்கப்பட்டதுடன், இவை கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்தப்படவுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற முதன்மை…
