தீவிரமடையும் தாழமுக்கம், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை மிக அண்மித்து தமிழ்நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார். மேலும் அவர், இந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய, தென் மாகாணங்கள் கன மழையைப்…

Read More

அவசரகால நிலை நீடிப்பு..! வர்த்தமானி வெளியீடு.

நாட்டில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரகால நிலையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28.12.2025) குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.   இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரிப்பதற்கும் இந்த பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

இன்றிலிருந்து மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்..!

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்கிழமையிலிருந்து நாட்டின் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும்…

Read More

நாட்டின் அனர்த்த உயிரிழப்பு 635 ஆக உயர்வு!

நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (08) நண்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் சுமார் 192 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  அத்துடன், 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.  டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர்.  இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது.  இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி…

Read More

தன்னார்வலர்களாக களம் இறங்கிய கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்.

பேரிடர் மேலாண்மை மையத்தில் இந்த நெருக்கடியான நேரத்தில் தங்கள் உறுதியான ஆதரவை தன்னார்வலர்களாக வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றிகளும் பாராட்டுகளும். உங்கள் சேவை தொடரட்டும்.

Read More

இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் C-130 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதைச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடம் ஆலோசகர் (வளர்ச்சி ஒத்துழைப்பு) மைத்ரே குல்கர்னி, உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மந்தீப் சிங் நேகி மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள்…

Read More

வழமைக்கு திரும்பும் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும். இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு…

Read More

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

Read More

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் தொடர்ந்து நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (19) பலத்த மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீவின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 க்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்….

Read More