மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் (10.1.2026) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை. இதேவேளை இன்றையதினம் அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக…

Read More

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

அடுத்து வரும் 36 மணி நேரத்தில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணி நேரத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும் …

Read More

இன்றைய வானிலை அறிக்கை (16 12 2025)

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். வானிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது.  அதேவேளை இலங்கையின் தென் பகுதியை…

Read More

இன்றிலிருந்து மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்..!

கிழக்கில் அலை வடிவிலான காற்றுப் பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக, இன்று செவ்வாய்கிழமையிலிருந்து நாட்டின் மழை நிலைமையில் ஓரளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிரதேசத்தின் கிழக்குச் சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும்…

Read More

வானிலை அறிக்கை

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சுற்றியுள்ள மீதமுள்ள கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசுவதாகவும், காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறையிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்…

Read More

இன்றைய வானிலை அறிக்கை (14 12 2025)

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  மத்திய மலைப் பிரதேசங்களின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 – 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு…

Read More

மலையக பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டிட்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. பல இடங்களில் ஏற்கனவே நிலம் விரிசல் அடைந்து வருவதாலும், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில்…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக விஜயம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களை நேற்று நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோன்று கண்டி மாவட்டத்துக்கும் சென்றுள்ளனர்.கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவும் இதன்போது கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை…

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு! – முக்கிய அறிவிப்பு

ஏராளமான நிவாரணக் குழுக்கள் மற்றும் கனரக வாகனங்களின் வருகை காரணமாகப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சுத்தம் செய்யும் பணி மற்றும் மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளது. பொலில் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் சில மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட இடங்களைப் படம்பிடிக்கும் அல்லது பார்வையிடும் வாகனங்கள், உந்துருளிகளின் வருகை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இடையூறை விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் பிரதேச செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு…

Read More

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப்…

Read More