மலையக பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டிட்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. பல இடங்களில் ஏற்கனவே நிலம் விரிசல் அடைந்து வருவதாலும், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில்…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக விஜயம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள கம்பளை கணபதி தோட்ட மக்களை நேற்று நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன் இராசமாணிக்கம், திலித் ஜயவீர மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். அதேபோன்று கண்டி மாவட்டத்துக்கும் சென்றுள்ளனர்.கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவும் இதன்போது கலந்துக்கொண்டுள்ளார். இதன்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலைமை…

Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு! – முக்கிய அறிவிப்பு

ஏராளமான நிவாரணக் குழுக்கள் மற்றும் கனரக வாகனங்களின் வருகை காரணமாகப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சுத்தம் செய்யும் பணி மற்றும் மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்துவதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளது. பொலில் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் சில மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட இடங்களைப் படம்பிடிக்கும் அல்லது பார்வையிடும் வாகனங்கள், உந்துருளிகளின் வருகை நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இடையூறை விளைவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, நிவாரணக் குழுக்கள் பிரதேச செயலாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு…

Read More

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார இதனை தெரிவித்துள்ளார். மின் கட்டணம் செலுத்தப்படாமைக்காக இந்த மாதத்தில் எந்தவொரு துண்டிப்பும் மின்சார சபையினால் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் மின் கட்டணம் சேர்க்கப்படும் என்றும், இந்த நேரத்தில் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல பாதிக்கப்பட்ட பகுதிகளில் மானி வாசிப்புகள் மற்றும் மின் கட்டணப்…

Read More

மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மீண்டும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.   அடுத்த சில நாட்களில் நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும், இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டில் மழை பெய்யும் நிலை அதிகரிக்கும். குறிப்பாக, வடக்கு, வட – மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும்  மழை பெய்யும் நிலை அதிகரிக்கக்கூடும். எனவே, வானிலை மாற்றம் தொடர்பான மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்கள்…

Read More

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் – வெளியான அறிவிப்பு

டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்  உறுதிப்படுத்தியுள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.

Read More

வழமைக்கு திரும்பும் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து

டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும். இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு…

Read More

ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் மீட்ப்பு நடவடிக்கை.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கண்காணித்துள்ளார். அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் சிக்கிய பேருந்திலுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது. கடற்படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அதிகாலை வேளையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விமான படையின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் ஜனாதிபதி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

Read More

மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகம்!

தற்போதைய மோசமான வானிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் விடுதிக்கருகாமையிலும் வெள்ளநீர் ஊடுருவியுள்ளது. மேலும், கனமழை காரணமாக மகாவலி நதி நிரம்பி வழிவதால் பேராதனையில் உள்ள றோயல் தாவரவியல் பூங்கா (மல்வத்தை) தற்போது நீரில் மூழ்கியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் நிரம்பியுள்ளன. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். காணொளி –…

Read More

புத்தளம் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் நகர் உள்ளடங்கலாக பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கும், தெரிந்தவர்கள் இல்லத்துக்குமாக மாற்றியனுப்பப்பட்டுள்ளார்கள். அவசர கால நிலைத்தொடர்பில் உதவிகளை பெற்றுக்கொள்ள 117 என்கின்ற எண்ணுக்கு அழைப்பை மேற்க்கொள்ளுங்கள். காணொளி பதிவு – கிருஷான் யோகராசா

Read More