28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்

சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனன் (Lauterbrunnen) பகுதியில் உள்ள கிம்மல்வால்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேஸ் ஜம்பிங் (Base jumping) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 28 வயது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தனது நண்பருடன் இணைந்து ‘நேபாளப் பாலத்தில்’ இருந்து குதித்தபோது, எதிர்பாராதவிதமாக மலையின் தரைப்பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். இவ்விபத்து குறித்து சுவிஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சூரிக்கில் வலதுசாரி அரசியல்வாதிகளின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன

சுவிஸ் மக்கள் கட்சியின் (SVP) கூற்றுப்படி, சூரிக்கில் உள்ள அக்கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளின் நுழைவாயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பெயிண்ட் கொண்டு கோஷங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, கிறிஸ்மஸ் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் லோரென்ஸ் ஹபிச்சர் மற்றும் ஸ்டீபன் டூல் ஆகியோரின் வீடுகள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்கு இடதுசாரி தீவிரவாதிகளே காரணம் என SVP குற்றம் சாட்டியுள்ளதுடன், இது கட்சி நிர்வாகிகளை அச்சுறுத்தும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஒரு தாக்குதல்…

Read More

மூன்றாவது தடவையாக வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை 0.25%  ஆக குறைத்துள்ளது. பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் அபாயத்தை தவிர்க்கும் நடவடிக்கையில், இந்த முடிவை எடுத்துள்ள பெடரல் ரிசர்வ் வங்கி, அமெரிக்காவில் வேலை வாய்ப்பு மந்த நிலை ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளது எனவும் எச்சரித்துள்ளது. இந்த வட்டி குறைப்பின் மூலம் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி குறையும். இதன்மூலம், தனிநபர் கடன், கடன் அட்டைகளுக்கான கடன் மற்றும் கார் அடமானக் கடன்களுக்கான வட்டி குறையும்…

Read More

ஜப்பானில் பாரிய தீ – 170க்கு மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து நாசம்! – ஒருவர் பலி

ஜப்பானின் தெற்கு கடலோர நகரமான ஓய்டாவில் உள்ள சாகனோசெக்கி பகுதியில் நேற்று (18) மாலை திடீரென தீ பரவியதில் 170க்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள், கடைகள் தீயில் எரிந்து பெருமளவு சேதங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என தீயில் எரிந்த வீடொன்றிலிருந்து மனித உடல் எச்சங்களை கண்டுபிடித்த அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக…

Read More

கியூபாவில் தினசரி மின்வெட்டைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது

வெனிசுலா மற்றும் மெக்சிகோவிலிருந்து எரிபொருள் விநியோகம் குறைந்ததால், கியூபாவில் தினசரி மின்வெட்டைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில், கியூபாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் குறைந்துள்ளது. முக்கிய கூட்டாளிகள் விநியோகத்தைக் குறைத்ததால், மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, தலைநகர் ஹவானாவில் கூட ஒன்பது மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு ஏற்படுகிறது.

Read More

உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது

கிளவுட்ஃப்ளேர் செயலிழப்பால் உலகளாவிய ரீதியில் இணையம் ஸ்தம்பித்தது உலகளாவிய இணைய உட்கட்டமைப்பு சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமான கிளவுட்ஃப்ளேர் (Cloudflare)-இல் ஏற்பட்ட பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இணையத்தின் சில பகுதிகள் முடங்கியுள்ளன. சர்வதேச ஊடகங்கள் மற்றும் சேவை கண்காணிப்புத் தளங்களின் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.இதன் விளைவாக, X சமூக ஊடகம், லெட்டர்பொக்ஸ்ட் (Letterboxd) உள்ளிட்ட பல பிரபலமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டதோடு, கிளவுட்ஃப்ளேரின் சொந்த நிலைத் தகவல் பக்கமும் (status page) சில நேரம் செயலிழந்தது. அத்துடன்,…

Read More

அமெரிக்காவின் பல உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் நீக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மாட்டிறைச்சி மற்றும் COFFEE உள்ளிட்ட பல அமெரிக்க உணவுப் பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளார். நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் உயர்ந்ததால் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வரிகள் குறைக்கப்பட்ட உணவுகளில் வாழைப்பழங்கள் மற்றும் தக்காளி ஆகியவை உள்ளடங்குகின்றன . வரிகள் நீக்கம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Read More

பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு..!!

கண்ணியமே முக்கியம்.. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை படிப்படியாக குறைக்க ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடனான வர்த்தக வழிதடத்தை முடிந்தவரை புறக்கணித்து பிற நாடுகளிடம் வணிக உறவை அதிகரிக்க ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது….

Read More

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் தீவிரமடையும் மோதல் – ஆஸ்திரேலியா எடுத்த நடவடிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ஆஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரையும் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ADF பணியாளர்களும் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார். இந்த நடவடிக்கை இராணுவ ஆதரவை வழங்குவதற்காக அல்ல, பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மட்டுமே என்று அவர் மேலும் கூறினார். இதுவரை 2000 ஆஸ்திரேலிய குடிமக்கள் ஈரானை விட்டு…

Read More

தீவிரமடையும் மோதல் – ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் வீதிக்கு இறங்கிய மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலா தலைநகர் காரகாஸில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் – இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆரீன் மற்றும் வெனிசுலா கொடிகளுடன் ஊர்வலம் சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வெனிசுலா உள்துறை அமைச்சர் டியோஸ்டோடா கபெல்லோ, நாடாளுமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் போர்க் குற்றவாளி என ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். வெனிசுலாவும், ஈரானும் மிக…

Read More