நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மூடப்பட்ட யால தேசிய பூங்காவின் சாலைகள் மீண்டும் திறப்பு.
யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தற்காலிகமாக மூடப்பட்ட சில சாலைகள் இன்று (மார்ச் 05) முதல் மீண்டும் திறக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 05) பிற்பகல் 2மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் சாலை அமைப்பிற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில்…

