உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
X தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.
2022 ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
எலான் மஸ்க்தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும்.
ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அதன்படி எக்ஸ் தளத்திற்காக 33 பில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த ஒன்றிணைந்த நிறுவனங்களின் மொத்தத்தொகை 80 பில்லியன் டொலராகும்.