For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர்.
தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு குழுவின் அழைப்பாளராக செயற்படுவார்.
ஏனைய உறுப்பினர்களாக,
வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்,
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ,
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன,
ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே,
ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன்,
எட்கன் ஸ்பென்ஸ் உப தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க,
பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர்,
LOLC நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் செயல்படுவார்கள்.
நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்கும்.
நிதியம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகம், கணக்காய்வு மற்றும் அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இந்தக் குழு உறுதி செய்யும்.
அதன்படி, நன்கொடையாளர்கள் தமது நிதி உதவிகளை உள்நாட்டு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும், இலங்கை ரூபாவிலோ அல்லது வேறு எந்த நாணய அலகிலோ பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய முடியும்.
- Account Name: Deputy Secretary to the Treasury
Account Number: 2026450
Bank: Bank of Ceylon
Taprobane branch
Swift code : BCEYLKLX
மேலும், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் நேரடியாக நிதியை வைப்புச் செய்யும் நன்கொடையாளர்கள், பின்வரும் கணக்குகள் மூலம் நிதியை வைப்புச் செய்ய முடியும்.
வெளிநாட்டு நாணய அலகுகளுக்கான கணக்கு விபரங்கள்:
- US Dollar (USD)
Bank: Deutsche Bank Trust Company Americas, New York, USA
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 04015541
Routing Number: 021001033
SWIFT: BKTRUS33XXX - Euro (EUR)
Bank: ODDO BHF Bank, Frankfurt am Main, Germany
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 0000739854
IBAN: DE39500202000000739854
SWIFT: BHFBDEFF500 - Pound Sterling (GBP) – Account 1
Bank: HSBC Bank Plc, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 39600144
Sort Code: 40-05-15
IBAN: GB48MIDL40051539600144
SWIFT: MIDLGB22XXX - Pound Sterling (GBP) – Account 2
Bank: Bank of Ceylon (UK) Ltd, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 88001249
Sort Code: 40-50-56
IBAN: GB89BCEY40505688001249
SWIFT: BCEYGB2LXXX - Japanese Yen (JPY)
Bank: MUFG Bank, Tokyo, Japan
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 653-0407895
SWIFT: BOTKJPJTXXX - Australian Dollar (AUD)
Bank: Reserve Bank of Australia
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 81736-4
BSB: 092002
SWIFT: RSBKAU2SXXX
ஜனாதிபதி ஊடகப் பிரிவு