For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
ஆடம்பரமான மற்றும் நிகரற்ற சேவையின் மூலம்கொழும்புக்கு பெருமையை சேர்க்கும் City of Dreams Sri Lanka
தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு விடுதி என்ற பெருமையுடன், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. தனது மைல்கல் திறப்பு விழாவைத் தொடர்ந்து, ‘நுவா’ (Nüwa) எனும் முதன்மை சொகுசு ஹோட்டலையும், ‘சினமன் லைஃப்’ எனும் துடிப்புமிக்க நவீன ஹோட்டலையும் ஒரே உலகத்தரம் வாய்ந்த இடத்திற்குள் இது கொண்டு வந்துள்ளது. மெல்கோ ரிசார்ட்ஸ் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் (Melco Resorts & Entertainment) மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் மூலோபாயக் கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், கொழும்பு நகருக்கு ஒரு புதிய மாதிரியை அறிமுகப்படுத்துகின்றது. இது சொகுசு வசதிகள், வாழ்க்கைமுறை, பொழுதுபோக்கு, சில்லறை வணிகம் மற்றும் வர்த்தக அனுபவங்களை முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரம்மாண்டமாக ஒன்றிணைக்கின்றது.
4.5 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ள ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தனியார் முதலீடாகும். இந்தத் திட்டமானது நாட்டின் மீதான நீண்டகால நம்பிக்கையையும், ஒரு பிராந்திய மையமாக கொழும்பு நகரை நிலைநிறுத்தும் புதிய உத்வேகத்தையும் வெளிப்படுத்துகின்றது. இது வெறும் விருந்தோம்பல் மேம்பாடு என்பதைத் தாண்டி, கொழும்பு நகரம் எவ்வாறு மாறப்போகின்றது என்பதற்கான ஒரு சான்றாகவும் அமைகின்றது. அத்துடன், அதிக மதிப்புள்ள உலகளாவிய பயணம், வர்த்தகம் மற்றும் ஓய்வுக்காலச் சுற்றுலா ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமான, உலக நாடுகளுடன் இணைக்கப்பட்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நகரமாக கொழும்பு உருவெடுப்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
இந்தத் திட்டத்தின் மையக்கருவாக ‘ஒருங்கிணைந்த விடுதி’ எனும் கோட்பாடு அமைந்துள்ளது. உயர் ரக விருந்தோம்பல், பொழுதுபோக்கு, சில்லறை வணிகம், நல்வாழ்வு மற்றும் பாரிய அளவிலான நிகழ்வுகளை ஒரே சூழலில் ஒன்றிணைப்பதன் மூலம், உலகெங்கிலும் உள்ள முன்னனி சுற்றுலா நகரங்களை மறுவரையறை செய்ய இத்தகைய மாதிரிகள் உதவியுள்ளன. கொழும்பில் தற்போது உருவெடுத்துள்ள இந்தக் கோட்பாடானது, வருகை தருவோருக்கு தங்குமிட வசதியை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களுக்கு ஒரு முழுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ தொகுப்பில் உள்ள முதன்மை சொகுசு ஹோட்டலான ‘நுவா’ இந்த விடுதித் திட்டத்தின் மையமாகத் திகழ்கின்றது. 113 அறைகள் மற்றும் சூட்களைக் (suites) கொண்டுள்ள ‘நுவா’, கொழும்பு நகருக்கு மிகவும் நெருக்கமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஒரு சொகுசு அனுபவத்தை அறிமுகப்படுத்துகின்றது. நேர்த்தியான சேவை, வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட உட்புற அலங்காரங்கள், நுணுக்கமான விபரங்கள் மற்றும் நகரின் பரந்த காட்சிகளை வழங்கும் வசதி ஆகியவற்றுடன், இந்த விடுதி வளாகத்தின் மிக உயர்ந்த விருந்தோம்பல் அங்கமாக இது அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையின் சொகுசு விருந்தோம்பல் துறைக்கு ‘நுவா’ ஒரு புதிய தரத்தை நிலைநாட்டுகின்றது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஒருங்கிணைந்த விடுதித் திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் ‘சினமன் லைஃப்’ எனும் நவீன வாழ்க்கைமுறை ஹோட்டல் அமைந்துள்ளது. இது இந்தத் திட்டத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தையும், புத்துணர்வையும், சமகால நகரத்தின் கவர்ச்சியையும் வழங்குகின்றது. இந்தியப் பெருங்கடல் மற்றும் கொழும்பு நகரின் எழில்மிகு தோற்றத்தை ரசிக்கக்கூடிய வகையில் 687 அறைகள் மற்றும் சூட்களைக் கொண்டுள்ள ‘சினமன் லைஃப்’, துடிப்புமிக்க மற்றும் அனுபவங்கள் நிறைந்த தங்குமிடத்தை எதிர்பார்க்கும் விருந்தினர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சமூகக் கூடங்கள், சமகால விருந்தோம்பல் சேவைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் கவரும் அம்சங்கள் இந்த விடுதிக்கு ஒரு வலுவான வாழ்க்கைமுறை பரிமாணத்தை வழங்குகின்றன. இது ‘நுவா’ ஹோட்டலின் தனித்துவமான அமைதியையும், ஒரு பெரிய நகர்ப்புற சுற்றுலாத் தலத்தின் வேகத்தையும் மிகச் சரியாக சமநிலைப்படுத்துகின்றது.
இந்த ஹோட்டல் சேவைகளுக்கு அப்பால், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ ஒரு அடையாளச் சின்னமாக தனது நிலையை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு அனுபவங்களை ஒன்றிணைக்கின்றது. இதன் மையப்பகுதியில் சர்வதேச தரத்திற்கு இணங்க வடிவமைக்கப்பட்ட 180,000 சதுர அடி பரப்பளவிலான பொழுதுபோக்கு தளம் அமைந்துள்ளது. இது பிரத்தியேக VIP பகுதிகள் மற்றும் நேரடி மற்றும் மெய்நிகர் அனுபவங்களின் வலுவான வரிசையைக் கொண்டுள்ளது. மேலும், இந்த சுற்றுலாத் தளம் ‘தி ஷொப்ஸ்’ (The Shoppes) எனும் பகுதியை உள்ளடக்கியது, இது சொகுசு டிழரவஙைரநள நிலையங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை வணிகச் சூழலை அறிமுகப்படுத்துகின்றது. அதேவேளையில், ‘குருந்து ஸ்பா’ (Kurundu Spa) ஓய்வு, புத்துயிர் அளிப்பு மற்றும் முழுமையான புத்துணர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு நல்வாழ்வு அங்கத்தைச் சேர்க்கின்றது.
சர்வதேச வணிகம் மற்றும் நிகழ்வுகளுக்கான ஒரு சிறந்த இடமாக கொழும்பு கொண்டுள்ள மதிப்பை இந்த மேம்பாட்டுத் திட்டம் மேலும் வலுப்படுத்துகின்றது. நவீன ‘MICE’ (மாநாடுகள், ஊக்கத்தொகை பயணங்கள், கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள்) வசதிகள் மற்றும் நெகிழ்வான நிகழ்வு இடங்களுடன், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ உலகளாவிய எதிர்பார்ப்புகளுக்கு இணையான மட்டத்தில் மாநாடுகள், நிறுவன ரீதியான கூட்டங்கள் மற்றும் பாரிய அளவிலான அனுபவங்களை நடத்துவதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது.
கட்டடக்கலை ரீதியாக, இத்திட்டம் கொழும்பின் வானலைத் தோற்றத்தில் (skyline) ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகத் திகழ்கின்றது. புகழ்பெற்ற பொறியியலாளரும், வடிவமைப்பாளருமான செசில் பால்மண்ட் (Cecil Balmond) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இது, பொலன்னறுவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வட்டதாகே’ (Vatadage) அமைப்பினை உத்வேகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டடம் இலங்கையின் கலாச்சார விழுமியங்களையும், சமகால வடிவமைப்பையும் ஒன்றிணைத்து, பாரம்பரிய வேர்களைக் கொண்ட அதேவேளையில் எதிர்கால நோக்குடைய ஒன்றாகவும் அமையப் பெற்றுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெற்று வரும் நிலையில், அதன் அடுத்த கட்ட வளர்ச்சியில் ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ முக்கிய பங்காற்றும் வகையில் அமைந்துள்ளது. அதிக மதிப்புள்ள சர்வதேசப் பயணிகளை ஈர்ப்பதன் மூலமும், கொழும்பின் சர்வதேச நற்பெயரை வலுப்படுத்துவதன் மூலமும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன், நகரின் விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு வழங்கல்களை விரிவுபடுத்துவதன் மூலம், இந்த ஒருங்கிணைந்த விடுதியானது ஒரு சுற்றுலாத் தலத்தின் மேம்பாட்டிற்கு மட்டுமன்றி, நாட்டின் பரந்த பொருளாதார தன்னம்பிக்கைக்கும் பங்களிப்பு செய்கின்றது.
‘நுவா’ ஹோட்டல் உயர்தர சொகுசுத் தன்மையை உறுதிப்படுத்தும் அதேவேளையில், ‘சினமன் லைஃப்’ ஒரு வலுவான நவீன வாழ்க்கைமுறை பரிமாணத்தை வழங்குகின்றது. இதன் மூலம் ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’, கொழும்பு நகருக்கு ஒரு முழுமையான மற்றும் தனித்துவமான அடையாளத்தை முன்வைப்பதோடு, தெற்காசியாவில் ஒருங்கிணைந்த சுற்றுலாத் தல மேம்பாட்டிற்கு ஒரு புதிய தரத்தையும் நிலைநாட்டுகின்றது.