இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
இந்திய அணியை இழிவுபடுத்திய தென்னாபிரிக்க பயிற்சியாளர்.. அதிகரிக்கும் கண்டனம்
கவுகாத்தியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், நேற்று செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணி வீரர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். 2வது இன்னிங்ஸில் டிக்ளேர் செய்யாமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்தது குறித்து பதிலளித்த அவர் ,
`We Wanted India To Grovel’’ என தெரிவித்தார்.Grovel’ என்றால், கைகள், முழங்கால்களை தரையில் ஊன்றி மண்டியிட வைப்பது என அர்த்தம். இது இனவெறியை குறிக்கும் என்பதால் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1976ல், இங்கிலாந்து கேப்டன் டோனி க்ரீக், வெஸ்ட்இண்டீஸ் அணியை இதே வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்து, பின்னர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
