For more than three decades, Selyn Group has continuously evolved by responding to the realities of the communities connected to its operations. Since its founding in 1991 as a small handloom enterprise, Selyn has grown into a diversified fair-trade business spanning ethical manufacturing, retail, exports, sustainable product innovation, and community development. At the heart of…
இலங்கையில் Cultus Workforce Development Services அறிமுகம், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வகையில் AWS re/Start மற்றும்தொழில் தயார்ப்படுத்தல் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கிறது
Cultus Education and Technology Services இன் துணை நிறுவனமான Cultus Workforce Development Services Pvt Ltd. இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பணியாளர் நிலைமாற்றத்தில் கவனம் செலுத்தி, சர்வதேச மட்டத்திற்கு திறன் மேம்படுத்தல் மற்றும் நிலை உயர்த்தல் போன்றவற்றில் ஈடுபடும் நிறுவனமாக இது திகழ்கிறது.
இளைஞர்களின் திறன்கள், மனநிலை மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தி, கூட்டாண்மை சூழலில் அவர்களை திறம்பட இயங்கச் செய்து, அர்த்தமுள்ள தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு வழிகாட்டும் பரந்த பயிற்சி வழிகாட்டல் திட்டமாக, தனது காப்புரிமை பெற்ற Cultus Job Readiness (CJR) நிகழ்ச்சித்திட்டத்திற்கு மேலதிகமாக, Amazon Web Services உடன் இணைந்து சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட AWS re/Start நிகழ்ச்சியையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
AWS re/Start நிகழச்சித்திட்டம் என்பது, குழு அடிப்படையிலான ஒரு பணிக்குழாம் மேம்படுத்தல் முயற்சியாகும். இது தனிநபர்களை Cloud Computing துறையில் ஆரம்பநிலைத் தொழில்களுக்கு தயார்படுத்துவதற்காக, தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய நடைமுறை ரீதியிலான தொழில்சார் திறன்களையும் ஒருங்கிணைத்து வழங்குகின்றது. அத்துடன், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், தொழில்முறைச் சூழல்கள், நீண்டகால வாழ்க்கைத்தொழில் மேம்பாடு மற்றும் பணியிட எதிர்பார்ப்புகளுக்கு அமைய பங்கேற்பாளர்களை Cultus Job Readiness (CJR) நிகழ்ச்சித்திட்டம் தயார்படுத்துகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டம், ஏற்கனவே 400 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை கவர்ந்துள்ளது. இது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் திறன்களைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது. ஆரம்பத்திலிருந்தே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழில் வாய்ப்புகளைத் தேடும் ஆர்வமுள்ள கற்போர், ஏப்ரல் 27 திங்கட்கிழமை ஆரம்பமான அறிமுக AWS re/Start அணியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இந்தியா, இந்தோனேசியா மற்றும் மியான்மார் உள்ளிட்ட பல சந்தைகளில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புத் தகைமைகளை அதிகரித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் Cultus Workforce Development Services நிறுவனம் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்குத் தேவையான ஒரு தகுதியான பணிக்குழுவை கட்டியெழுப்புவதுடன், நிறுவனத்தின் இலங்கை வருகையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
தனது ஆரம்பக்கட்ட வேலைத்திட்டங்களுக்கு அப்பால், அதிக கேள்வி நிலவும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்துவதற்கான நீண்டகால நோக்கை Cultus Workforce Development Services வெளிப்படுத்தியுள்ளது. 5G வலையமைப்பு கட்டமைப்பு, Semiconductor தொழில்நுட்பங்கள், மின்சார வாகன (EV) தொழில்நுட்பம், Embedded systems, சூரிய சக்தி ஆற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் Generative AI, ரோபோட்டிக்ஸ் மற்றும் தன்னியக்கம், IoT மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியன இத்தகைய மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் சிலவாகும். பாரம்பரிய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அப்பால், இலங்கையின் மாறிவரும் தொழில்துறைத் தேவைகளை ஆதரிப்பதில் அந்நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பை இந்த பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறை வெளிப்படுத்துகின்றது.
அத்துடன், இளைஞர்களுக்கு நிலையான தொழில் வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் இலங்கையின் உற்பத்தித்திறன் மற்றும் உலகளாவிய ரீதியிலான போட்டித்திறனை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தில் அளவிடக்கூடிய மற்றும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனது இலக்கை அந்நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோக்கமானது, இலங்கையின் ‘2030 ஆம் ஆண்டிற்கான தேசிய டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்துடன்’ பொருந்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிமுக நிகழ்வில் உரையாற்றுகையில், Cultus Workforce Development Services Pvt Ltd. பிரதம நிறைவேற்று அதிகாரி அஷானி ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “அதிகம் டிஜிட்டல் மயமாகி வரும் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த உலகில் இளைஞர்கள் சிறப்பாக செயலாற்றுவதற்கு தேவையான திறன்களுடன் அவர்களை வலுப்படுத்துவதற்கான ஒரு நீண்டகால அர்ப்பணிப்பின் தொடக்கமாக இலங்கையில் எமது ஆரம்பம் அமைந்துள்ளது. AWS re/Start மற்றும் எமது Cultus Job Readiness (CJR) போன்ற முன்னெடுப்புகளின் ஊடாக, இளைஞர்களுக்குத் தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதுடன், அவர்களை நிஜ உலகத் தொழில்துறைகளுக்கும் நாம் தயார்படுத்தி வருகின்றோம். இது இலங்கை இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முன்னோக்கி நகர்த்தும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை.” என்றார்.
Cultus Education இன் ஸ்தாபகர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் நளின் சிங் கருத்துத் தெரிவிக்கையில், “பிராந்தியமெங்கும் இதேபோன்ற பணிக்குழு மேம்பாட்டு முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம், முறைப்படியான திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றத்தக்க பலத்தை நாங்கள் நேரடியாக அவதானித்துள்ளோம். இலங்கை சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளதுடன், திறமைகளையும் வாய்ப்புகளையும் இணைக்கும் ஒரு நிலையான சூழல் அமைவை உருவாக்குவதற்குப் பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நாம் ஆவலாக உள்ளோம்.” என்றார்.
தொழில் தயார்நிலை மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளில் பிரதானமாக கவனம் செலுத்துவதுடன், இலங்கையின் உயர்கல்வித் துறையினுள் AWS Academy மற்றும் AWS Educate போன்ற உலகளாவிய கற்றல் தளங்களை அறிமுகப்படுத்துவதற்கும் Cultus Workforce Development Services ஆதரவு வழங்கும். முழுமையான கட்டணக் கழிவுடனான கற்றல் வழிமுறைகள் ஊடாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தமது மாணவர்களுக்குத் தொழில்துறைக்கு ஏற்ற Cloud மற்றும் டிஜிட்டல் திறன்களைப் பெற்றுக்கொடுக்க இத்திட்டங்கள் வழிவகுக்கின்றன.
இலங்கையின் டிஜிட்டல் திறன்கொண்ட மற்றும் உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை மிக்க ஒரு பணிக்குழுவை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தவும், அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும், அரச நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்களை தம்மோடு இணைந்து பணியாற்றுமாறு Cultus Workforce Development Services நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு பார்வையிடுங்கள்: www.cultusworkforce.com அல்லது https://cultusedu.com/