தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
கனடா டொராண்டோவில் நடந்த விமான விபத்து.
கனடா டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி வீழ்ந்த விமானத்தில் இருந்த 80 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
மின்னியாபோலிஸிலிருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்ற போது தீப்பொறிகள் பறக்க ஆரம்பித்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்ப்பு பணிகள் ஆரம்பமாகின. இருப்பினும் பதினெட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணம் என்னவென்று புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.