Seylan Tikiri proudly revived the Tikiri Student Savings Centre at S. Thomas’ Preparatory School during the recent Grade 1 enrolment day. On the same day, parents took an important first step towards their children’s future by opening Tikiri accounts, helping young minds learn the value of saving and smart money management from an early age….
கமநல அபிவிருத்தி திணைக்களம் – இழப்பீடு வழங்கும் நடவடிக்கை
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சல் தொடர்பில் விவசாயிகள் 1918 என்ற அவசர இலக்கம் ஊடாக கமநல காப்புறுதிச் சபைக்கு அறிவுறுத்த வேண்டும். ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கமநல மற்றும் கமநல காப்புறுதிச்சபை ஒன்றிணைந்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கமநல மற்றும் கமநல காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் 25 மாவட்டங்களுக்கு தாக்கம் செலுத்திய டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் விளைச்சல் தொடர்பில் விரைவான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு கமத்தொழில் மற்றும் கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய கட்டாய காப்புறுதி பட்டியலுக்குள் உள்ளடங்கும் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு,மிளகாய், சோயா மற்றும் போஞ்சி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பிட முடியாத நிலை காணப்படுகிறது.வெள்ளம் வழிந்தோடியதன் பின்னர் கமநல சேவை மத்திய நிலையத்துக்கு முறையாக பதிலளிக்குமாறும், கமநல மத்திய நிலையத்துக்கு வருகைத் தந்து விபரங்களை வழங்க முடியாவிடின்,கமநலசேவை பிரதேச அலுவலர் அல்லது கமத்தொழில் ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாதிப்புக்களை மதிப்பிட்டு அறிக்கையிடுவதற்கு ஒருமாதகாலம் காணப்படுவதால் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் வழங்குவதற்கும், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் விவசாயிகள் 1918 என்ற அவசர இலக்கம் ஊடாக கமநல காப்புறுதிச் சபையை தொடர்புக் கொள்ள முடியும். கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கமநல மற்றும் கமநல காப்புறுதிச் சபை ஒன்றிணைந்து இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Time to give 88jllogin a shot. Hoping for a smooth login experience and some winning streaks. Let’s see what it’s all about! Try your luck 88jllogin