Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
Prime Group இளைஞர்களின் விருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் Battle of the Blues மற்றும் Maroons சமர் போட்டிகளின் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக தொடர்ந்தும் அனுசரணை
Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வெறும் கட்டுமானத் துறையில் மாத்திரம் மட்டுப்படுத்தாது அதற்கும் அப்பால் விஸ்தரித்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்யும் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலை கிரிக்கெட் சமர்களுக்கான உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இம்முறை Prime Group இணைந்துள்ளது. அதற்கமைய, றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரிக்கு இடையிலான 147 ஆவது Battle of the Blues மற்றும் ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிக்கு இடையிலான 96 ஆவது Battle of the Maroons ஆகியவற்றுக்கு நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இடம்பெற்று வரும் Battle of the Blues சமர், அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வருகிறது. விளையாட்டுக்கு அப்பால், றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் போட்டித்தன்மை, பெருமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சங்கமிப்பாக இது அமைந்துள்ளது.
இந்த மரபுடன் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக Prime Group பெருமையுடன் கைகோர்த்துள்ளது. ஒரே மாதிரியான தொலைநோக்குச் சிந்தனை, சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட இரு தரப்பினருக்கும் இடையிலான ஓர் இயல்பான இணக்கப்பாடாக இந்தப் பங்காண்மை உடன்படிக்கை அமைகின்றது.
இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடசாலைக் கிரிக்கெட் சமரான ‘Battle of the Blues’ இளைஞர்களின் நற்பண்புகளை வடிவமைப்பதைப் போல, சமூகங்களில் வேரூன்றி, காலத்தால் அழியாத நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று, ஒருமித்த உணர்வுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழல்களை Prime Group உம் உருவாக்கி வருகின்றது.
1924 ஆம் ஆண்டில் ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட Battle of the Maroons விறுவிறுப்பான போட்டித் தொடர் என்பதுடன் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இப்போட்டித்தொடரானது இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்கான ஒரு தளமாக விளங்குவதுடன், உள்நாட்டு கழகங்கள் மற்றும் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல கௌரவமிக்க வீரர்களையும் இது உருவாக்கியுள்ளது.
96 ஆவது Battle of the Maroons இன் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இணைந்துள்ள Prime Group, இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாவதையிட்டு பெருமிதம் கொள்கின்றது. அத்துடன், பல தசாப்தங்களாக சிறந்த தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் நற்பண்புள்ள பிரஜைகளை உருவாக்குவதில் இப்பாடசாலைகள் ஆற்றிவரும் பங்களிப்பையும் நிறுவனம் இதன் மூலம் கௌரவிக்கின்றது.
இந்த இரு பங்காளர் உடன்படிக்கைகளும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றுக்கான Prime Group இன் அர்ப்பணிப்பை அடிப்படையாகக் கொண்டவை. இலங்கையின் மிகவும் புகழ்மிக்க நான்கு பாடசாலைகளினால் உருவாக்கப்பட்ட கௌரவமிக்க பழைய மாணவர்கள், மதிப்பிற்குரிய துறைசார் நிபுணர்கள் மற்றும் செல்வாக்குமிக்க ஆளுமைகளை ‘Battle of the Blues’ மற்றும் ‘Battle of the Maroons’ ஆகியன ஒன்றிணைக்கின்றன. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம், இளைஞர் வலுவூட்டலுக்கான தனது ஈடுபாட்டை Prime Group மீள உறுதிப்படுத்துவதுடன், திடமானதும் பிரகாசமானதுமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை பலப்படுத்துகின்றது. அத்துடன், இலங்கையின் மிகவும் செல்வாக்குமிக்க சமூகங்களுக்கிடையில் நிலையான உறவுகளைக் கட்டியெழுப்புவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Prime Lands (Pvt) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி/நிறைவேற்றுப் பணிப்பாளர் ருமிந்த ரந்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டு, சமூகம் மற்றும் நாம் போற்றிப் பாதுகாக்கும் விழுமியங்கள் ஆகிய பலமான அடித்தளங்களின் மீதே இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ‘Battle of the Blues’ கடந்த 147 வருடங்களாக மிகவும் உறுதியான அடித்தளங்களே நிலைத்து நிற்கும் என்பதை நிரூபித்துள்ளதுடன், தற்போது தனது 96 ஆவது போட்டியை எட்டியுள்ள ‘Battle of the Maroons’ அதே உத்வேகத்தைக் கொண்டுள்ளது. Prime Group இல் நாமும் அதே வைராக்கியத்துடனும் உறுதியுடனும் கட்டுமானங்களை மேற்கொள்கிறோம்; எமது இந்தப் பங்காளர் உடன்படிக்கை அதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றது. இப்போட்டிகளில் பிரதிபலிக்கும் கூட்டு முயற்சி, சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் நற்பண்புகள் போன்ற அதே விழுமியங்களே, நாம் வழங்கும் ஒவ்வொரு வீடமைப்பு மற்றும் காணி அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பின்னாலுள்ள உந்துசக்திகளாகும்.” என்றார்.
களமிறங்கும் றோயல் கல்லூரி, பரி. தோமாவின் கல்லூரி, ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளுக்கும் Prime Group தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு தரப்பு மாத்திரமே வெற்றியைத் தழுவ முடியும் என்றாலும், உண்மையான வெற்றி என்பது விளையாட்டின் உன்னதத் தன்மைக்கும், அதன் மூலம் உத்வேகம் பெறும் எதிர்கால சந்ததியினருக்கும் எப்போதும் உரித்துடையதாகும்.

**boostaro**
Boostaro is a purpose-built wellness formula created for men who want to strengthen vitality, confidence, and everyday performance.