காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து : தாக்குதலை மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *