இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
கிளிநொச்சியில் கடந்த வருடம் கசிப்பு சார் குற்றங்கள் ; மூவாயிரம் பேர் கைது!
கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட, சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

